கொரோனா வைரஸ்- உலகமெங்கும் அச்சுறுத்தி வந்தாலும், எதிர்த்து போராடி வருபவர்கள் மருத்துவர்கள். இதனால் உலகம் முழுவதும் பல மருத்துவர்களும் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவச உடை அரசு மருத்துவமனைகளில் இல்லாத சூழலில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் ரூபாய் 700 மதிப்புள்ள 300 முழு பாதுகாப்பு கவச உடையை வழங்கி இருக்கிறது. கோயமுத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை - கொவிட் சிகிச்சை பிரிவுக்கு, வழங்கிய 250 கவச ஆடைகளை மருத்துவர் நிர்மலா பெற்றுக் கொண்டார்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கிய 50 கவச ஆடைகளை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேரலாதன் பெற்றுக் கொண்டார்.
மேலும் இரட்டை அடுக்கு துணியிலான 200 முக கவசமும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதற்கான முன் முயற்சியை தொடங்கிய மரு. இஸ்மாயில் அவர்களுக்கும், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் மரு.விஜயகிரி, செயலாளர் சஞ்சய் சாங்ளா, பொருளாளர் சீனிவாசன் மற்றும் ரோட்டரி சங்கத்தினருக்கு பாராட்டுக்கள்.