மேட்டுப்பாளையம் நகர எல்லைக்குள், நெல்லித்துறை சாலையில் இயங்கி வரும் தொழிற்சாலை யு.பி.எல் என்று அ ழைக்கப்படும் யுனைடெட் பிளிச்சர்ஸ் லிமிடெட்.
1949ம் ஆண்டு துவக்கப்பட்டு 1952-53ல் உற்பத்தியை துவக்கியது இந்த தொழிற்சாலை. பவானி ஆற்றில் கழிவு நீரை கலந்து வருவதாக நீண்ட காலமாக குற்றசாட்டு உள்ள நிலையில் இப்போது காற்றையும் மாசு படுத்தி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் மக்கள்.
சமீபகாலமாகவே இந்த ஆலையை சு ற் றி யு ள் ள சாலைகளில் பயணிப்போர் இதனை உணர்ந்து இருக்க கூடும். ஒரு மாதிரியான சுவாசிக்க இயலாத மாசடைந்த காற்று குமட்டலை ஏற்படுத்துகிறது . எப்போதாவது பயணிப்போருக்கே இப்படி என்றால், அந்த ஆலையின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
அங்குள்ள குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து இருப்பதாக சொல்கிறார் சமூக ஆர்வலர் சுரேஷ். இது தொடர் பாக நமக்கு பிரத்யேகமாக கிடைத்த தகவல்கள் அதிர வைக்கின்றன.
இந்த ஆலைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே தண்ணீரையும், மின்சாரத்தையும் நிறுத்த வேண்டும் என்று மாவட்ட சுற்று சூ ழ ல் பொறியாளர் பரிந்துரைத்த பின்பும், நடவடிக்கை ஏதும் இன்றி இந்த தொழிற்சாலை இயங்கி வருவது கவலைக்கு உரியது என்கிறார்கள் சுற்று சூழல் ஆர்வலர்கள்.
அறிக்கை சொல்வது என்ன?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலையில் வைக்கப்பட்டு இருந்த வேதிபோருள்கள் தீ பற்றிக் கொண்டன. இதனால் இந்த ஆலையை சுற்றி உள்ள மக்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தை மறைத்தது தொழிற்சாலை. ஆனால் காரணத்தை கண்டறிந்த மக்கள் ஆலையை முற்றுகை இட்டனர். அதன் பின்பு ஆய்வுக்கு வந்த மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் நளினி தொழிற்சாலைக்கு தண்ணீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பை துண்டித்து ஆலையை மூட பரிந்துரை செய்தார்.
இயங்காத சுத்திகரிப்பு மையம்
எந்த தொழிற்சாலையும் கழிவு நீரை சுத்திகரித்து அந்த நீரை மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவே இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீரை நேரிடையாக ஆற்றில் கலந்து வந்தது உறுதியாகி உள்ளது.
சோடியம் ஹைட்ரோ சல்பைட் 'வேதிப்பொருள்களை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறாக 14000 கிலோ அளவுக்கு தொழிற்சாலையில் வைத்து இருந்தது, மேலும் ஆலையை முறையாக பராமரிக்காதது, மாசுக்கட்டுபாடு வாரியத்தின் விதிகளை மீறியது என்று பல்வேறு குற்றசாட்டுகள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பின்பும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை .
விரிவுபடுத்தப்பட்ட தொழிற்சாலை
இந்த ஆலையில் புதியதாக விரிவாக்கம் செய்ய அனுமதி ஏதும் தரவில்லை என்கிறது மாசுகட்டுபாடு துறை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு புதியதாக உற்பத்தி கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் மேலும் புதியதாக விரிவுபடுத்தப்பட்டது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
தொடர் விபத்துகள்
நான்கு வருடங்களுக்கு முன்பு திடீரென அருகில் உள்ள UBL ஆலையில் கேட்ட வெடிச்சத்தமும் அதனைத் தொடர்ந்து காற்றில் கலந்த அழுகிய முட்டை நெடி, சுற்றி உள்ள பகுதிகளில் சிறு சிறு சுவாசப்பிரச்னைகளையும், பள்ளிக்கு புறப்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தெரு முழுவதும் பரவி, பெண்கள், ஆண்கள் என அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறி சாலையில் குவிந்து என்ன நடக்கிறது எனப் புரியாமல், ஆனால் ஏதோ அசம்பாவிதம் நிகழ்கிறது என்பதை உணரத் தொடங்கினார்கள்.
விபத்தை ஏற்படுத்திய தொழிற்சாலை வாய்மூடி கமுக்கமாக இருந்து கொண்டது. பிறகு காரணம் கண்டு பிடித்த மக்கள் ஆலையை முற்றுகை இட்டனர். அப்போது ஆய்வுக்கு வந்த சுற்றுசூழல் அலுவலர் அளித்த அறிக்கையில் சுத்திகரிப்பு நிலையம் - இயங்கவில்லை. அதனை சுற்றி கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன என்று குற்றசாட்டு வைக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சென்ற வருடம் சாயகழிவுகள் சுற்றுசுவரை உடைத்துக்கொண்டு நெல்லிதுறை சாலை முழுவதும் பரவியது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த சாலையில் நல்வாய்ப்பாக அப்போது மக்கள் இல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை, -
இப்போதும் புகைபோக்கியில் வெளியேறும் புகை வான் நோக்கி செல்லாமல் மீண்டும் பூமிக்கு திரும்ப வருகிறது.ஆலையின் பல்வேறு இடங்களில் இருந்து புகை வெளியேறிக் கொண்டே இருப்பதை பார்க்கமுடிகிறது. இப்படி தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வரும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எப்போது?
உருவான வரலாறு |
கோவை லட்சுமி மில்லின் அப்போதைய இயக்குனர் ஜி.கே.சுந்தரம் தான் யுபிஎல் உருவாக முக்கிய காரணமானவர். லட்சுமி மில், திருப்பூர் தனலட்சுமி மில், கோவை காட்டன் மில், கோவை முருகன் மில், வசந்தா மில், வடமதுரை கோத்தாரி டெக்ஸ்டைல்ஸ் இவற்றின் அப்போதைய உரிமையாளர்கள் இணைந்து துவக்கியது தான் இந்த தொழிற்சாலை.
எதற்காக துவக்கப்பட்டது ?
இந்திய விடுதலைக்கு பிறகு நமது மக்களுக்கு போதுமான அளவு துணிகள் இல்லாத நிலை இருந்தது. ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் துணிகளை அளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக துவக்கப்பட்டது தான் யுபிஎல் தொழிற்சாலை, ஜி.கே.சுந்தரம் காங்கிரஸ் கட்சியிலும் பிறகு சுதந்திரா கட்சியிலும் பங்கெடுத்து வந்தவர். மக்கள் நலனில் இருந்த அக்கறை காரணமாகவே இந்த தொழிற்சாலையை துவக்கினார்கள்.
என்ன உற்பத்தி ?
மேற்கண்ட மில்களில் உற்பத்தி ஆன காடா துணிகளை உடுத்தும் துணி போல மாற்றும் செயல்பாடுகள் இந்த தொழிற்சாலையில் நடைபெற்று வந்தன. காஸ்டிக் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் மூலம் துணிகள் தூய்மை படுத்தப்பட்டன. மேலும் துணிக்கு சாயம் ஏற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மாறிய நிர்வாகம்
இந்த தொழிற்சாலையை துவக்க காரணமான மில்களில் லட்சுமி மில் மற்றும் முருகன் மில் தவிர மற்ற மில்கள் காலபோக்கில் நொடிந்து போயின. இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த ஸ்வஸ்திக் நிறுவனம் கைக்கு இந்த தொழிற்சாலை கைமாறியது.