மாரடைப்பு ஏன்? எதனால் ? தடுப்பது எப்படி?

மாரடைப்பு தான் உலகில் இறப்புக்கான முதல் காரணமான நோயாக திகழ்கிறது. மாரடைப்பில் இருபத்தைந்து சதவீத நோய், வருவதற்கு முன் எந்தவொரு அறிவிப்புமின்றி ( அறிகுறியுமின்றி ) ஏற்படும். இதற்கு பெயர் Silent Ischemia. இவ்வகை மாரடைப்பின் போது காரணமே தெரியாமல் திடீர் மாரடைப்பால் மனிதன் உயிரிழக்க கூடும்.


இருபத்தைந்து சதவீத மாரடைப்பு முன்னரே அறிகுறி தெரிந்தாலும் மருத்துவமனை எடுத்து செல்லும்முன்னே உயிரிழப்பு ஏற்படும். ஆக ஐம்பது சதவீதம் மாரடைப்பு வந்தால் காப்பாற்ற இயலாது. மீதமுள்ள ஐம்பது சதவீத மாரடைப்பே அறிகுறிகளோடு ஏற்படும். இவை மட்டுமே மருத்துவம் பார்த்து குணப்படுத்த இயலும்.


மாரடைப்பு எனும் coronary artery disease எதனால் ஏற்படுகிறது ?


கீழ் கண்ட காரணங்களால் மாரடைப்பு மனிதனுக்கு ஏற்படுகிறது,


அவை


* புகையிலை பிடித்தல் ( Cigarette smoking ),


* மது உட்கொள்ளுதல் ( Aicohol drinking ),


* அதீத கொழுப்பு சத்துள்ள உணவு உட்கொள்ளும் போது உடலின் கொழுப்பு அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு நிச்சயமாக வரும்,


* உடல் பருமன்,


* மன உளைச்சல்,


* உடல் உழைப்பு இல்லாத வாழ்வு முறை,


* நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் சரியான கட்டுப்பாட்டில் இல்லாத போது.


வந்தப்பின் மருத்துவம் பார்ப்பதை காட்டிலும் வரும்முன் காத்தலே என்றும் மாரடைப்பு திகழாமல் இருக்க சாலச்சிறந்தது.


 


மாரடைப்பு வரும்முன் காக்க என்ன செய்ய வேண்டும் ?


* சரி சமவீத சத்துணவு உட்கொள்ளுதல் வேண்டும்,


* தினம் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்,


* புகை பிடித்தல் கூடாது,


* மது அருந்துதல் கூடாது,


* உடல் பருமனை தடுத்தல் நன்று,


* உடலின் இரத்த அழுத்தத்தையும் சர்க்கரை அளவினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்,


* நம் வாழ்வு முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் ( மேற்கத்திய உணவுமுறையில் இருந்து நம் பாரம்பரிய உணவுமுறைக்கு வரவேண்டும் ).


மாரடைப்பின் அறிகுறிகள் என்ன ?


* மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சடைப்பு,


* மயக்கம் வருதல்,


* வாந்தி


* மார்வலி ( மாரினை பிசைவது போன்றதொரு வலி )


*இடது தோள்பட்டை வலி,


* வயிற்றெரிச்சல்,


* அதீத வியர்வை ஏற்படல்,


* கழுத்து, மேல்முதுகு மற்றும் தாடையில் வலி ஏற்படல்.


 


நாம் உண்ணும் உணவும் மாரடைப்பினை வராது நம்மை பாதுகாக்கும்.


என்ன உணவு நல்லுணவு, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு ?


* காய்கறிகளும் பழவகைகளும் உட்கொள்ளுதல் நன்மை,


* நல்ல கொழுப்பு என்று ஏற்றுக்கொள்ளப்படும் பாதாம், பிஸ்தா வேர்க்கடலை மற்றும் அக்ரூட் பருப்பினை ஒரு பிடி தினம் உண்ண வேண்டும்.


* ஒருநாளுக்கு இரண்டு தேக்கரண்டிக்கு மேல் எண்ணெயை உபயோகிக்கக்கூடாது.


* செக்கில் ஆட்டிய நல்லெண்ணய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகித்தல் சிறந்தது.


* ப்ரோக்கோலி மற்றும் பட்டர் ஃப்ரூட் மாரடைப்பை தடுக்கும் தன்மையுடையது.


* Dark chocolate எனும் பாலில்லாத கோகோ சாக்கலேட் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாது காக்கும்.


* கட்டஞ்சாயா எனும் Black tea, Green tea, White tea மற்றும் Oolong tea இரத்தக்குழாய் அமைப்பின் தடுக்கும் வல்லமை வாய்ந்தது.


 


மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனை செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் ?


* நோயாளியை அமைதிப்படுத்தி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும்.


* லோடிங் டோஸ் ( Loading dose ) மருந்துக்களை உடனே தரவேண்டும்.


லோடிங் டோஸில் உள்ள மருந்துகள் டிஸ்பிரின் (Dispirin), க்ளோபிடோங்க்ரெல் (Clopidogrel) மற்றும் அட்வார்ஸ்டாடின் (Atvorstatin) ஆகும்.


* லோடிங் டோஸ் மருந்து கொடுத்தவுடன் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டும்.


 


இருதயத்தை பாதுகாக்க என்னென்ன பரிசோதனைகள் வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும் ?


* இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.


* இரத்தத்தின் சர்க்கரை அளவினை கண்காணிக்க வேண்டும்.


* இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினை பரிசோதனை செய்ய வேண்டும்.


* ECG பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.


 


மருத்துவமனையில் என்ன செய்வார்கள் ?


அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் முதலுதவி செய்தப்பின் ECG , Treadmill test மற்றும் Echo cardiogram செய்து பார்த்து ஏதாவது   பிரச்சனை இருந்தால் Angiogram எனும் பரிசோதனை செய்து எங்கு கோரோனரி இரத்தகுழாய் அடைப்பு உள்ளது, மற்றும் எந்த அளவிற்கு இரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்று முடிவுசெய்தபின் மருந்துகளே போதுமா அல்லது Stent வைக்கலாமா அல்லது Open heart surgery எனும் இருதய அறுவை சிகிச்சை தேவையா என்பதை இருதய சிகிச்சை நிபுணர்கள் முடிவு செய்வர்.


 


 மாரடைப்பு வராமல் தடுத்தலே சிறந்தது.  அப்படி  மாரடைப்பு ஏற்படுகையில் மருத்துவர் சொல்லும் சிகிச்சையினை உடனுக்குடன் மேற்கொள்ளுதல் சிறந்தது.


Featured Post

கிராமியக்கலைஞர் பத்திரப்பன்

கிராமியக்கலைஞர்  பத்திரப்பன்          மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர்  திரு.பத்திரப்பன்  (வயது 87) . இவருக்கு த...