கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று மேட்டுப்பாளையம். பல்வேறு வகைகளில் தனிச்சிறப்புகளைப் பெற்று விளங்கும் நகரம். நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் அமைந்துள்ளது.
பவானி ஆறு
மேட்டுப்பாளையம் நகரிலிருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில், கல்லாரில் பாக்குத் தோப்புகளிலுள்ள பாக்கு மரங்கள் காற்றில் அசைந்தாடி வாவென நம்மை வரவேற்கும். மேட்டுப்பாளையம் பவானி ஆறு மேட்டுப்பாளையத்தில் என்றும் வற்றாத ஜீவ நதியாக பவானி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்கும் 16-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பவானி ஆற்று நீரை ஆதாராமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆற்று நீர் பாசனத்திற்கும் பவானி ஆறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு பவானி ஆற்றின் குறுக்கே இரண்டு நீர் மின் நிலையங்கள் கட்டப்பட்டு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.
காய்கறி மண்டிகள்
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் விவசாய விலை பொருட்களின் முக்கிய வியாபாரக் கேந்திரமாக மேட்டுப்பாளையம் ந க ர ம் வி ளங் கி வ ருகிற து. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிலுள்ள உருளை கிழங்கு மற்றும் காய்கறி மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்திலிருந்து உருளைகிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், வெள்ளை பூண்டு , கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பச்சைப்பட்டாணி, டர்னிப், நூல்கோல் ஆகிய காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் வந்து கொண்டிருக்கின்றன.
இது தவிர நீலகிரி மாவட்டத்தில் காய்கறி சீசன் இல்லாத பொழுது கர்நாடக மாநிலம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீன்ஸ் ஆகிய காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. மார்கெட்டிலுள்ள காய்கறி மண்டிகளில் ஏலம் முடிந்த பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் 90% காய்கறிகள் கேரளாவிற்கு செல்கின்றன.
விவசாயம்
மேட்டுப்பாளையம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் விவசாய தொழிலில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. நெல், சோளம் , மக்காச்சோளம், கம்பு, ராகி, பருத்தி, கரும்பு, சிறு தானியங்கள், பயிர் வகைகள் மற்றும் நிலக்கடலை, எள், ஆமனக்கு, சூரியகாந்தி என எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்ப டு கி ன் ற ன .
மே லு ம் வாழை , கறிவேப்பிலை, பாக்கு மற்றும் தென்னை விவசாயமும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கல்லார், நெல்லித்துறை ஆகிய பகுதிகளில் விளையும் பாக்கு இரகங்கள் புதுடெல்லி மற்றும் வட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
நெசவு
இவ்வாறு விவசாயத் தொழில் ஒரு பக்கம் இருந்தாலும், சிறுமுகை வட்டாரப் பகுதி, நெசவுத் தொழிலில் தனக்கென தனி மு த் தி ரை பதித்து வருகிறது . மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதால், தொழில்துறையில் போதிய வளர்ச்சி அடையவில்லை.
வனக்கல்லூரி
மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள 7 வனக்கல்லூரிகளில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியும் ஒன்று. இங்கு கல்வி பயின்ற 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்திய வனப்பணிக்கு (ஐ எப் எஸ் தேர்வாகி, நாடு முழுவதும் வனத்துறை உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காரமடையில் அரசு கலை கல்லூரி துவங்கப் பட்டுள்ளது. மேலும் 3 தனியார் கல்லூரிகளும் உள்ளன.
மலை இரயில்
மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு, மலை இரயில் இயக்கப்பட்டு வருகிறது. 1899-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை இரயில் போக்குவரத்து தொடங்கியது. மலை இரயிலில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் இரயிலும் இயக்கப்பட்டுவருகிறது. கோவைக்கும் தினம் நான்கு முறை இரயில் சென்று வருகிறது.
கல்லாறு
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றுலா ஸ்தலமான கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இப்பண்னை 1900-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மேலும் ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு அருகே பிளாக் தண்டர் கேளிக்கை பூங்காவும் உள்ளது.
வழிபாட்டுத் தளங்கள்
மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வனபத்திரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாத சுவாமி கோவில், இடுகம்பாளையம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், தென் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில், அருள்மிகு மாதேஸ்வரர் கோவில், குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில், குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோவில்கள் உள்ளன.
மேலும் பழமை வாய்ந்த பெரிய பள்ளிவாசல், CSI ஆலயம் மற்றும் புனித ஆயர் ஆலயம் ஆகியவையும் நம் ஊருக்கு பெருமை சேர்க்கின்றன.
மேட்டுப்பாளையம் நகராட்சி
மேட்டுப்பாளையம் நகராட்சி, பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நகராட்சி 1978 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1998 - ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும் மாற்றப்பட்டது.
34840 நகராட்சியில் நகரில் வற்றாத ஒடினாலும் குடிநீர்த்தட்டுபாடும் நீரால் வருவது விசயமாகும்2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 69128 பேர் இதில் ஆண்கள் 34287 பேர். பெண்கள் 34840 இதர - 1. மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
நகரில் வற்றாத ஜீவநதி பவானி ஆறு ஒடினாலும் ஆங்காங்கே சில வார்டுகளில் குடிநீர்த்தட்டுபாடும் உள்ளது. சாக்கடை கழிவு நீரால் பவானி ஆறு மாசுபட்டு வருவது மிகவும், வேதனைக்குரிய விசயமாகும்.
சுற்றுலாப் பயணிகளி ன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊட்டிக்கு செல்லும் வழியில் மேட்டுப்பாளையம் நகர ம் அமைந்துள்ளதால் அனைவருக்கும் அறிமுகமான ஊராகவே மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகின்றது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .